சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி?.. காங்கிரஸ் மேலிடம் யோசனை

 
காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும்: சச்சின் பைலட்  நம்பிக்கை

ராஜஸ்தான் காங்கிரஸ் நெருக்கடியை  முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கட்சி மேலிடம் சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்.

ராஜஸ்தான் காங்கிரஸில்  முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் தொடர்ந்து தக்கவைத்து கொள்வது, சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்குவது என்ற ஒரு சமரச பார்முலாக காங்கிரஸ் மேலிடம் கொண்டு வரவாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

அதேசமயம், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் பலர் போராட்டங்களை நடத்தி அவரை முதல்வராக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸில் புதிய திருப்பமாக, சச்சின் பைலட் கடந்த திங்கட்கிழமை இரவு  அசோக் கெலாட்டின் விசுவாசியாக கருதப்படும் அம்மாநில அமைச்சர் பிரதாப் கச்சாரியாவாலை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இது அம்மாநில காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப் கச்சாரியாவாஸ்

அமைச்சர் பிரதாப் கச்சாரியாவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் பேசினால் அது ஒன்றும் புதிதல்ல, சட்டப்பேரவையில் பேசி வருகிறோம். பைலட் சாஹிப் என் வீட்டுக்கு வந்தால், வெளிப்படையாக நாங்கள் பஜன் கீர்த்தனை செய்ய மாட்டோம், எல்லாவற்றையும் பற்றி பேசுவோம். நாங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசினோம். நாங்கள் பேசியதை இங்கே பகிர்ந்து கொள்வது மதிப்புக்குரியது அல்ல என்று தெரிவித்தார்.