காங்கிரஸ் கட்சியின் சுப்பிரமணியன் சாமி.. மணிஷ் திவாரி மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

 
சித்துவின் ஆலோசர்களை ரவுண்ட் கட்டி அடிக்கும் காங்கிரஸ்… நடவடிக்கை எடுக்க சொல்லும் மணிஷ் திவாரி

அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரும் மனுவில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி கையெழுத்திட மறுத்ததாால் அவரது (காங்கிரஸ்) கட்சி தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.

மத்திய அரசு அண்மையில் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு ஒரு பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அக்னிபாத் திட்டம்

இந்த சூழ்நிலையில்,  பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த 6 எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது, அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துதம் அறிக்கையில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரியை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். மணிஷ் திவாரி அக்னிபாத் திட்டத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்தவர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்குள் விவாதங்கள் நடக்கும்போது மணீஷ் திவாரியை  காங்கிரஸின் சுப்பிரமணியன் சாமி என்று அழைப்பார்கள் என கூறப்படுகிறது. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சிக்கும், மணிஷ் திவாரிக்கும் இடையேயா உறவு பலவீனமாக உள்ளது. இந்நிலையில், மணிஷ் திவாரியின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. மணிஷ் திவாரி தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் இல்லையென்றால் அவர் மீது கட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிஷ் திவாரியை கட்சியிலிருந்து வெளியேற்றினாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகாது எனவே கட்சியிலிருந்து நீக்கம் செய்வது நல்ல முடிவுவாக இருக்காது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.