உத்தர பிரதேச பயணத்தை பாதியில் முடித்து கொண்டு திரும்பிய பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது உத்தர பிரதேச பயணத்தை பாதியில் முடித்து கொண்டு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதேசமயம், நாட்டின் பழம் பெரும் கட்சியான காங்கிரஸோ படுதோல்வியை சந்தித்தது. உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி மிகவும் தீவிரமாக பணியாற்றினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியால் எழுச்சி பெற முடியவில்லை.

பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில் கட்சியின் மறுமலர்ச்சிக்கான வியூகத்தை பற்றி விவாதிக்க லக்னோவில் காங்கிரஸ் சார்பில் பணிமனை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் 2வது நாளில் பங்கேற்பதற்காக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த புதன்கிழமை லக்னோ வந்தார். ஆனால் பிரியங்கா காந்தி திடீரென அன்று நள்ளிரவு டெல்லி கிளம்பி சென்றார். பிரியங்கா காந்தி தனது பயணத்தை விரைவாக முடித்து கொண்டு கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ்

இது தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில், பிரியங்கா காந்தி நள்ளிரவில் (புதன்கிழமை) டெல்லி திரும்பினார். இருப்பினும் பணிமனை திட்டம் தொடர்ந்து நடைபெறும். எங்கள் தேசிய செயலாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அது (கூட்டம்) நடந்து கொண்டிருக்கிறது. பிரியங்கா ஜியின் நிகழ்ச்சியை தவிர வேறு எதுவும் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்தார்.