மக்களின் ஒவ்வொரு தேவையையும் பயன்படுத்தி அவர்களை கொள்ளையடிக்க மோடி அரசு பார்க்கிறது..காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

மக்களின் ஒவ்வொரு  தேவையையும் பயன்படுத்தி அவர்களை கொள்ளையடிக்க மோடி அரசு பார்க்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் இதர விளைபொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பட்டு மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் சாமானிய மக்கள் மீது அதன் தாக்கத்தை காட்டும் வீடியோ என்று காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காங்கிரஸ் கூறியிருப்பதாவது: விலை உயர்ந்து வருவதுபா.ஜ.க.வை பொறுத்தவரை, தேர்தல் வெற்றி என்பது கொள்ளையடிப்பதற்காக உரிமம் என்பது தெளிவாகிறது. 

பெட்ரோல் பம்ப்

ஏறக்குறைய ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் உள்ள கொடூரமான உயர்வுகள்,ஒவ்வொரு நாளும் ஒரு உதாரணம். மோடி ஆட்சியில் தினசிர, வாராந்திர மற்றும் மாதாந்திர விலைவாசி  உயர்வுகளின் அசிங்கமான உண்மையை காட்டும் கண்ணாடி இதோ. டி.ஏ.பி. உரத்தின் விலையை மூடைக்கு ரூ.150 உயர்த்தியதன் மூலம் 62 கோடி விவசாயிகள் மீது ரூ.3,600 கோடி கூடுதல் சுமையை மத்திய அரசு சுமத்துகிறது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியதற்காக விவசாயிகள் மத்திய அரசால் தண்டிக்கப்படுகிறார்கள். 

பிரதமர் மோடி

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் உரங்கள் மட்டுமின்றி உங்களின் ஒவ்வொரு  தேவையையும் பயன்படுத்தி உங்களை கொள்ளையடிக்க மோடி அரசு பார்க்கிறது. இந்த பட்டியல் முடிவற்றது. மோடி அரசாங்கம் அதன் முடிவில்லாத மக்களை கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், கனவை வளர்ப்பதை மறந்து விடுங்கள், இந்தியா ஒரு பயங்கரமான கனவில் வாழத் தொடங்கும். தேசம் அவர்கள் கொள்கையை விட சிறந்த புத்தாண்டு பரிசை மோடி அரசிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியுமா?