கெஜ்ரிவால் பாகிஸ்தானுக்கு சென்றால் நான் பாகிஸ்தானியன் எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்வார்.. காங்கிரஸ் கிண்டல்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானுக்கு சென்றால் நான் பாகிஸ்தானியன் எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லலாம் என்று காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமது புதிய கரன்சி நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படத்துடன் ஸ்ரீ கணேஷ் ஜி மற்றும் ஸ்ரீ லெட்சுமி ஜியின் புகைப்படத்தையும் வைக்குமாறு மத்திய அரசு மற்றும் பிரதமரிடம்  கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்


ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மறுபுறம் லெட்சுமி தேவி, கணேஷின் (பிள்ளையார்) புகைப்படமும் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் முழு நாடும் ஆசிர்வதிக்கப்படும். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை, புதிய ரூபாய் நோட்டுகளில் இந்த படங்கள் இருக்கலாம். இது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

சந்தீப் தீட்சித்

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த ஆலோசனையை வாக்கு வங்கி அரசியல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்சித் கூறுகையில், அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பி டீம். அவருக்கு எந்த புரிதலும் இல்லை. அது அவருடைய வாக்கு வங்க அரசியல். அவர் பாகிஸ்தானுக்கு சென்றால்,  நானும் பாகிஸ்தானியன் எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று அவர் சொல்லலாம் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் அனீஸ் சோஸ் டிவிட்டரில், அன்புள்ள அரவிந்த் கெஜ்ரிவால், லெட்சுமி மற்றும் கணேஷ் ஆகியோரால் செழிப்பை கொண்டு வர முடிந்தால், நாம் இன்னும் செழிப்பை பெறுவதை உறுதி செய்ய, அல்லாஹ், இயேசு, குருநானக், புத்தர் மற்றும் மகாவீரரையும் சேர்க்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.