காங்கிரஸ் தலைவர் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு

 
sa

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

 பழமையான கட்சி என்கிற பெருமைக்குரிய கட்சி காங்கிரஸ்.  137 வயதான காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல் போட்டி 6 வது முறையாக ஏற்பட்டிருக்கிறது . இந்த தேர்தலில் காந்தி, நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி என்று யாருமே போட்டியிடவில்லை . 24 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த குடும்பத்தை சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் .

so

இன்றைக்கு நடைபெறும் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே - சசிதரூர் இருவரும் களத்தில் நிற்கிறார்கள்.  இதில் யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மல்லிகார்ஜுன கார்கே(வயது80) கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்.   சசிதரூர்(வயது66) கேரளாவைச் சேர்ந்தவர்.  9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு இந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் .  இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும்,  தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று நடைபெறுகிறது.

 மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தருவதும் இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பம் நடுநிலை வைக்கிறது.