2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இழப்பது சாத்தியம்தான்.. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உறுதி

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இழப்பது சாத்தியம்தான் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

கேரள இலக்கிய விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் ஆதிக்கத்தை ஒப்புக் கொள்கிறேன். அதேவேளையில், அவர்கள் பல மாநிலங்களை இழந்துள்ளனர் என்பதும், மத்திய அரசை இழப்பது முடியாதது அல்ல என்பதும் உண்மை. 2019ல் அவர்கள் (பா.ஜ.க.) எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்று பார்த்தால், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு இடமும் அல்லது பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஒரு இடத்தை தவிர மற்ற அனைத்து இடங்களும், மேற்கு வங்கத்தில் 18 இடங்களும் கிடைத்தன. 

பா.ஜ.க.

இப்போது அந்த முடிவுகள் அனைத்தையும் நககெடுப்பது (அந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது) சாத்தியமற்றது. 2024ல் பா.ஜ.க. பெரும்பான்மைக்கு கீழே இறங்குவது முற்றிலும் சாத்தியமாகும். புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் கடைசி நிமிடத்தில் ஒரு பிரமாண்டமான அலைக்கு வழி வகுத்தது. இது 2024ல் மீண்டும் நடக்காத ஒரு விரோதம். பா.ஜ.க.வுக்கு 50 இடங்கள் குறைவதும், எதிர்க்கட்சிகள் லாபம் பெறுவதும் முற்றிலும் கருதத்தக்கது. 

காங்கிரஸ்

காங்கிரஸ் வாரிசு என்று நாம் விரல் நீட்டிச் சொன்னால், நீங்கள் நாடு முழுவதும் சுற்றிப் பாருங்கள், முலாயம் சிங் யாதவ் அவரது மகன், லாலு பிரசாத் யாதவ் அவரது மகன், கருணாநிதிக்கு பிறகு கருணாநிதி மகன், பால் தாக்கரேவுக்கு அவரது மகன் கட்சி தலைவர்களாக பதவியேற்றனர். வாரிசு அரசியலில் சரத் பவாரும் இருக்கிறார். அவரது மகள் அல்லது சகோதரரின் மகன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.