திரிணாமுல் காங்கிரஸ் ஒரு திருடர்களின் கட்சி... ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு

 
திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு திருடர்களின் கட்சி என்று ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி கைதாகி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மாநில அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து அவரது அமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி பறித்தார்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில் நேற்று பசு கடத்தல் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் அனுப்ரதா மோண்டலை சி.பி.ஐ. கைது செய்தது. இது முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்  தொடர்ந்து மோசடி வழக்குகளில் சிக்கி வருவதை குறிப்பிட்டு அந்த கட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாக அவர்கள் அரசை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அரசு மற்றும் காவல்துறையின் ஆதரவு இல்லாமல் இது போன்ற மோசடிகள் சாத்தியமில்லை. திரிணாமுல் காங்கிரஸ் ஒரு திருடர்களின் கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.