ராகுல் காந்தியின் யாத்திரை நாளை காஷ்மீர் வரும் நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்

 
 தீபிகா புஷ்கர் நாத்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாளை ஜம்மு அண்ட் காஷ்மீரில் நுழைய உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் செய்தி தொடர்பாளர் தீபிகா புஷ்கர் நாத் அந்த கட்சியிலிருந்து விலகினார்.

ராகுல் காந்தி  தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாளை ஜம்மு காஷ்மீரில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க  பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான சவுத்ரி லால் சிங்குக்கு காங்கிரஸ் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் தீபிகா புஷ்கர் நாத் கட்சியிலிருந்து விலகினார்.

சவுத்ரி லால் சிங்

தீபிகா புஷ்கர் நாத் டிவிட்டரில், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸில் சேர்வதற்கான சவுத்ரி லால் சிங்கின் முன்மொழிவை கருத்தில் கொண்டு, அகில இந்திய காங்கிரஸிலிருந்து ராஜினாமா  செய்வதை  தவிர எனக்கு வேறு வழியில்லை. 2018ம் ஆண்டில் கதுவா கற்பழிப்பு வழக்கில் கற்பழிப்பாளர்களை வெட்கமின்றி பாதுகாத்து நாசப்படுத்தியதற்கு லால் சிங் காரணமாக இருந்தார் என பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ்

அதேசமயம், காங்கிரஸிலிருந்து விலகிய தீபிக புஷ்கர் நாத்தை தனக்கு யார் என்று தெரியாது என்று பஞ்சாப் காங்கிரஸ்  தலைவர் அம்ரீந்தர் சிங் வாரிங் தெரிவித்துள்ளாா. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் வாரிங் கூறுகையில், நாத் யார் என்று எனக்கு தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்காக வேண்டும் என்றே ராஜினாமா செய்கிறார்கள் என தெரிவித்தார்.