ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது எனக்கு வருத்தம் இல்லை... வதந்திகளை பரப்பாதீங்க.. ஹர்திக் படேல்

 
ஹர்திக் படேல்

ராகுல் காந்தி மீதும், பிரியங்கா காந்தி மீதும் எனக்கு வருத்தம் இல்லை என குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் விளக்கம் அளித்துள்ளார்.


குஜராத் காங்கிரஸின் செயல் தலைவரான ஹர்திக் படேல் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,குஜராத்தில் காங்கிரஸின் நான் செயல் தலைவராக இருந்தாலும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கட்சி தலைமை என்னை கருத்தில் கொள்ளவோ அல்லது கேட்கவோ இல்லை. கட்சியில் எனது நிலை, புதிதாக திருமணமான மணமகன் ஒருவருக்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்ந்தேன் என்று தெரிவித்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், குஜராத்தில் பா.ஜ.க. மற்றும் அக்கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளை ஹர்திக் படேல் பாராட்டினார். ஹர்திக் படேலின் இந்த கருத்துக்கள் அவர் பா.ஜ.க. இணைவதற்கான ஊகங்களுக்கு வழி வகுத்தது. ஆனால் அதனை ஹர்திக் படேல் மறுத்துள்ளார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் கூறியதாவது: ராகுல் காந்தி மீதும், பிரியங்கா காந்தி மீதும் எனக்கு வருத்தம் இல்லை.  மாநில காங்கிரஸ் தலைமை மீது எனக்கு வருத்தம் இல்லை. ஏன் வருத்தம்? தேர்தல் வரப்போகிறது, இது போன்ற சமயங்களில் நேர்மையான மற்றும் வலிமையான நபர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் பேசுவார்கள். அமெரிக்க துணை அதிபர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றபோது நான் அவரை பாராட்டினேன். அதற்காக நான் அவருடைய கட்சியில் சேருகிறேன் என்று அர்த்தமா?. 

ஜோ பைடன் – கமலாஹாரிஸ் வெற்றியை 2 வருடத்திற்கு முன்பே கணித்த மதுரைஆதீனம்

போட்டியாளர் பாராட்டத்தக்க ஏதாவது  செய்தால், அதையும் நாம் பார்க்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த கிராம அளவில் பாடுபடுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இது தேர்தல் நேரம். கிராமங்களுக்கு செல்லுங்கள், நகரங்களில் கடினமாக உழைக்க வேண்டும். வருத்தப்படுவதை பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் கேள்விகள் எழுகின்றன மற்றும் பேச்சுகள் நடத்தப்படுகின்றன. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முன்பே தெளிவுப்படுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.