நீங்கள் மம்தா பானர்ஜியின் ஏஜெண்ட்.. ப.சிதம்பரத்தை சாடிய மேற்கு வங்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு

 
ப சிதம்

நீங்கள் மம்தா பானர்ஜியின் ஏஜெண்ட் என ப.சிதம்பரத்தை மேற்கு வங்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் நேற்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வழக்கு தொடர்பாக ஆஜரானார். அங்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவினர் போராட்டம் நடத்தினர். மேலும் அவருக்கு எதிராக முழக்கங்களை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் எழுப்பினர். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவினர் நடத்திய போராட்டம் நடத்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கறுப்பு ஆடை அணிந்த ஒருவர்,  ப.சிதம்பரம் போன்றவர்களால் தான் மேற்கு வங்கத்தில் கட்சியால் (காங்கிரஸ்) எழுந்து நிற்க முடியவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கொள்ளையடித்தது. நீங்கள் திரிணாமுல் காங்கிரசை காப்பாற்றுகிறீர்கள். 

காங்கிரஸ்

உங்களை போன்ற தலைவர்களால்தான்  மேற்கு வங்கத்தில் நாங்கள் கஷ்டப்படுகிறோம். உங்களை போன்றவர்களால்தான் மேற்கு வங்கத்தில் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மம்தா பானர்ஜியின் ஏஜெண்ட் என ஆவேசமாக கூறுவதை கேட்க முடிகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை மேலும், மேலும் வாக்கு சதவீதமும் 3 சதவீதமாக குறைந்தது.