முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் குழப்பம்! மாறன் குடும்பத்தினர் அதிருப்தி! ஆட்சியை வழிநடத்தும் 8 பேர்! - போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்

 
ja

 முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது.  மாறன் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.  திமுகவை நடத்துவது ஸ்டாலின் இல்லை.  அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று 8 பேர்தான் ஆட்சியை வழிநடத்துகிறார்கள் என்று அடுத்தடுத்து போட்டு தாக்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  திமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்கிற குமுறல் நீரு பூத்த நெருப்பாக புகைகிறது .  இதுகுறித்து ஆ.ர் எஸ். பாரதி முதல் பூனை குட்டியாக வெளியே வந்திருக்கிறார்.  

sj

 ஸ்டாலினுக்கு கட்சி குறித்த,  ஆட்சி குறித்த கவலை கிடையாது.  அவருடைய கவலை எல்லாம் பையனுக்கு முடிசூட வேண்டும் என்றுதான்.  திமுக ஆட்சியை ஸ்டாலின் நடத்தவில்லை.  அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற 8 பேர்தான் திமுக ஆட்சியை நடத்துகிறார்கள்.  சேகர்பாபு போன்ற சில பாபுக்காரர்கள் தான் தன்னை வழி நடத்துகிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினே கூறியிருக்கிறார். 

 முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தில் குழப்பம் நிலவுகின்றது . நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தயாநிதி மாறனுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படாததால் மாறன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறினார் ஜெயக்குமார் . 

அவர் மேலும் ,  அதிமுகவில் எந்த பிரிவும் பிளவும் இல்லை.  ஓபிஎஸ் உள்பட சிலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.  கடலில் கொஞ்சம் நீர் எடுத்தால் சமுத்திரம் வற்றி விடாது. சமுத்திரம் போன்றது அதிமுக .  ஓபிஎஸ்  என்று ஒரு அணி கிடையாது.  அவர்கள் அணிகள் அல்ல கிளிகள் என்றார்.

 அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் ஜி- 20 தொடர்பான பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்திற்கு  எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.  இது பாஜக கூட்டியுள்ள கூட்டம் அல்ல மத்திய அரசு கூட்டி இருக்கும் கூட்டம் என்றார்.