ஆ.ராசா பற்றி பிரதமரிடம் நேரில் நிர்வாகிகள் சொன்ன புகார்

 
m

மத்திய அமைச்சரும்,  தற்போதைய திமுக எம்பியுமான  ஆ. ராசா பற்றி பாஜக நிர்வாகிகள் நேரில் சொன்ன புகாரினை பிரதமர் கவனமுடன் கேட்டிருக்கிறார்.

 சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

 அப்போது , திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகத்தில் மத மாற்றங்கள் அதிகரித்து விட்டன என்று புகார் சொல்லியிருக்கிறார்கள்.  அது குறித்து மாநில பொதுச் செயலாளர் ஒருவர்,   மத அடிப்படைவாத சக்தி உண்டு. எழுச்சி பெற்று இருக்கின்றன . சிறுபான்மையினர் தங்களது ஓட்டு வங்கி என்பதால் இது எதையும் திமுக அரசு கண்டு கொள்வதே இல்லை என்று கூறி இருக்கிறார்.

ர்

 சில பாஜக நிர்வாகிகள்,    தமிழக இளைஞர்களிடம் பிரிவினைவாத சிந்தனை நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறது திமுக .  அதனால் தான் பிரிவினைவாதம் பேசும் கட்சியினரை கண்டு கொள்வதே இல்லை.  அது மட்டும் அல்லாமல்,  திமுக துணை பொது செயலாளரான  ஆ.ராசாவே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரிவினைவாதத்தை தூண்டு வகையில் பேசினார் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.  அனைத்தையும் கவனமுடன் கேட்டிருக்கிறார் பிரதமர்.

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய ஆ.ராசா,  பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார் ஆவேசமாக.

மேடையில் முதல்வரை வைத்துக்கொண்டே ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.  அந்த விவகாரம் பிரதமரின் சென்னை பயணத்தின் போது அவரிடம் நேரிலேயே புகாராக சென்றிருக்கிறது.