5 ஆயிரம் கோடி பணப்பட்டுவாடா புகார்! எடப்பாடிக்கு நெருக்கமானவர் வீட்டுக்கு பறந்த ஐடி

 
ep

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்காக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு  தலா 5 லட்சம் முதல் 25 லட்சம் வரைக்கும் பணப்பட்டுவாடா செய்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.   அதேபோல் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட செயலாளர்களுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் பணப்பட்டு வாடா செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.   மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட இருக்கிறார் என்று பரபரப்பு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

se

 இதை அடுத்து அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும் ஜெ ஜெ கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர்,  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கூறி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.  அந்த வழக்கு மனுவில், பணப்பட்டுவாடா விவகாரத்தினால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

p

  இப்படி பணப்பட்டு வாடா புகார் எழுந்திருக்கும் நிலையில்,   எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் ஐடி ரெய்டு நடந்திருக்கிறது.   நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமாக இருக்கிறது எஸ் பி கே கன்ஸ்ட்ரக்சன்.  விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு இந்த அலுவலகம் இயங்குகிறது.  இந்த நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாத்துரை.  கடந்த அதிமுகவின் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தார் செய்யாத்துரை.   இதனால் கடந்து 2018 ஆம் ஆண்டில் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடந்தது.

இந்நிலையில் தற்போது செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன்  மற்றும் பாலசுப்ரமணியம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்று பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது .  ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்து அதனால் இந்த ரெய்டு நடக்கிறதா?  இல்லை அதிமுகவின் பொது செயலாளர் விவகாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா  சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் அந்த சந்தேகத்தில் இந்த ரெய்டு நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.