ஓபிஎஸ் அணியில் நிர்வாகியாக அறிவிக்கப்பட்டவர் பகீர் புகார்!

 
ops

தன்னை கேட்காமலேயே நிர்வாகியாக அறிவித்ததாக ஓபிஎஸ் மீது, அவரது ஆதரவு நிர்வாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute


முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது.

அதில், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமனை, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக  ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஈரோடு அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஜெயராமன், தான் இன்னும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக.வில் இருப்பதாகவும், தன்னை கேட்காமலேயே ஓபிஎஸ் அவரது அணியில் நிர்வாகியாக அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஓபிஎஸ்க்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.