ஆணையம் விசாரணை - எடப்பாடி பழனிச்சாமி வாக்குமூலம்

 
e

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாக்குமூலம் தேவை என்று கருதினால் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது.

a

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுந்த சர்ச்சையை எடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.   ஆறுமுகசாமி ஆணையம் இதுவரைக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தி இருக்கிறது.   விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் ஜூன் மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்திருக்கிறது .  

 ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பாகவே,   ஜெயலலிதாவின் மரணம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு அளித்திருந்தார்.

e 

 இந்த மனு மீது ஆணையம் அளித்திருக்கும் உத்தரவில்,  யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் ஆணையத்தை கட்டாயப்படுத்த முடியாது.   ஆணையம் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கருதியதோ அவர்களிடம் எல்லாம் விசாரணை நடத்தி முடித்து விட்டது .  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை.   அதனால் மனுதாரரின் கோரிக்கை மீது ஆணையம் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

 அதே நேரம் அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ’ எடப்பாடி பழனிச்சாமியின் வாக்குமூலம்’ தேவை என்று கருதினால் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் ஆணையம் விசாரணை நடத்தும் என்று சொல்லி பெங்களூரு புகழேந்தியின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது  ஆணையம்.