ரஜினி பற்றிய கமெண்ட் - வைகோவுக்கு செல்லூர்ராஜூ பதிலடி

 
r

ரஜினி பேசுறது அவருக்கும் புரியல யாருக்கும் புரியல என்று வைகோ கமெண்ட் அடித்திருக்கும் நிலையில்,  ரஜினி ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகமாக பேசுவார் என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

rr

 நடிகர் ரஜினிகாந்த்  தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது.  அந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினியின் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்கள் குவிந்திருந்தனர்.  அவர்கள் ஆளுநருடனான சந்திப்பு குறித்து கேட்டபோது,  மரியாதை நிமித்தமாக பேசினேன்.  அரசியல் குறித்தும் அவரிடம் பேசினேன். ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என்று அவசர அவசரமாக பேசிவிட்டு வீட்டிற்குள் ஓடிவிட்டார். ரஜினியின் சந்திப்பும் அவரது பேச்சும் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

va

இதுகுறித்து மதிமுக  பொதுச்செயலாளர் வைகோவிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,   ‘’ரஜினி பேசுறது அவருக்கும் புரியல யாருக்கும் புரியல.  ஒரு நாளைக்கு நான் அரசியலுக்கு வாரேன் என்று சொல்கிறார் . மறுநாள் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் என்கிறார்.  அப்புறம் எல்லாரையும் வரச் சொல்கிறார்.  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எல்லாரும் வராங்க.  வந்த பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு பால்கனியிலிருந்து கையை காட்டி விட்டு போய்விடுகிறார்.   அவரை ஒரு சீரியஸாகவே எடுத்துக்க வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி சொன்னதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் பேச்சை வைகோ நக்கலடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

se

இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,  ’’ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார்’’என்று சொல்லி இருக்கிறார்.   அவர் மேலும்,  ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி சொன்னது குறித்தும், அதிமுகவிற்கு தலைமை ஏற்கப்போகிறார் ரஜினி என்று வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு,  ‘’ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் எனச் சொல்லி விட்டார்’’என்று பதிலளித்திருக்கிறார்.