ஆளுநர் ‘ஆர்.எஸ்.எஸ்.’ ரவி -திருமா அடித்த கமெண்ட்

 
ட்

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.  திராவிடன் சர்ச்சையில் அவர் இவ்வாரு விமர்சித்திருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள் என்று சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ர்ன்

 வேலூர் சிப்பாய் எழுச்சி தினத்தில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,   ‘’சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றார்கள்.  நேதாஜி ஐ. என். ஏ படைக்கு சிப்பாய்கள் வேண்டும் என்று சொன்னபோது முதலில் ஆதரவு கொடுத்தவர்கள் வேலூர் வீரர்கள் தான்’’ என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  ‘’மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டார்கள்.  ஆங்கிலேயர் நம்மை ஆள்வதற்கு முன்னர் பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள் . அப்பொழுது மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் சென்று வந்தார்கள் . வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை . இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறார்கள்.  அப்போது நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தான் இருந்தோம்’’என்றார்.

அவர் மேலும்,  ‘’ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறோம்.  ஆங்கிலேயர்கள் தான் நம்மிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டார்கள்.  வரலாற்றை இன்னும் உற்று நோக்கி பார்த்தால் தெரியும்.  விந்திய மழையை அடிப்படையாக வைத்து தான் நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள்  என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.   ஆங்கிலேயர்கள் தான் ’திராவிடன்’ என்ற வார்த்தையில் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்’’ என்று சொன்னார்.

டி

 திராவிடன் என்கிற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டது ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.  இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,  ’’திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர். எஸ். எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்’’என்கிறார்.

அவர் மேலும்,  ‘’திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.  திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை’’என்கிறார்.