மீண்டும் அமலுக்கு வருகிறது எம்.ஜி.ஆர். -ஜெ.,விதிகள்...இரட்டை தலைமை விதிகளை நீக்க முடிவு!

 
ஜ்

அதிமுகவில் இரட்டைத்தலைமைக்கு உருவாக்கப்பட்ட விதிகளை பொதுக்குழு கூட்டத்தில் நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்கான தீர்மானமும் நாளை நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிகிறது.   அந்த விதிகளை நீக்கிவிட்டு மீண்டும் எம்.ஜி.ஆர். விதிகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது எடப்பாடி தரப்பு என்று தகவல். 

 அதிமுகவில் ஓ .பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி  இணைப்புக்குப் பின்னர் 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இரட்டை தலைமை தொடர்பான சட்டவிதிகளை நீக்கிவிட்டு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் இருந்த விதிகளை அமல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவுகிறது. நாளை பொதுக்குழுவில் இது உறுதியாகும் என்று தெரிகிறது.

ம்ஜ்

 கடந்த 2017 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட அதிமுக தீர்மானங்களின் அடிப்படையில் கட்சியின் சட்ட விதி இது 20 திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.  இவற்றின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.  மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ஆகியோரின் இடத்தை அதிமுகவில் யாராலும் நிரப்ப முடியாது என்பதால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது.   இதற்கான விதி எண் 43ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

 கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 11 ன்படி பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் மூலம் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு வழங்கப்பட வேண்டிய பார்ம் ஏ, பார்ம் பி ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் , ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும்.

க்க்

 இரட்டை தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட இந்த விதிகளை தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  நீக்க முடிவு எடுத்திருக்கிறது .  இந்த விதிகளை நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமைக்கு அதிமுகவை கொண்டுவந்துவிட முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று தகவல்.

நாளை 23 ஆம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்ற 23  தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.  12 பேர் கொண்ட குழுவினர் இதனை இறுதி செய்துள்ளனர்.   எடப்பாடி பழனிச்சாமி -பன்னீர் செல்வத்திற்கும் இவற்றை அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இந்த இருபத்திமூன்று தீர்மானங்களில் ஒற்றை தலைமை தீர்மானம் இல்லை.   ஆனாலும் அதை தனித் தீர்மானமாகக் கொண்டு வந்து பொதுக்குழுவில் நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி  தரப்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்.