ஒருங்கிணைந்த அதிமுக - அமித்ஷா, நட்டாவின் விருப்பம்

 
ad

ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் அமித்ஷாவும், நட்டாவும் விரும்புவதாக சொல்கிறது கமலாலயம் வட்டாரம்.  ஒருங்கிணைந்த அதிமுக என்றால் ஓபிஎஸ், இபிஎஸ் மட்டுமல்ல,  சசிகலா, தினகரனும் இணைந்த அதிமுகவைத்தான் அவர்கள் விரும்புகிறார்களாம்.  எதற்கு இந்த விருப்பம் என்றால், எல்லாம் 2024 கணக்குதான் என்கிறார்கள். 

na

2024ல் வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரையிலும் திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் கூட்டணி கட்சியான அதிமுக பலமாக இருக்க வேண்டும்.  ஆனால், அதிமுகவோ ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி, தினகரன் அணி என்று 4 அணிகளாக பிரிந்து கிடக்கின்றன.   இதனால் வாக்குகள் சிதறுமே தவிர வெற்றி வாய்ப்பு நழுவிவிடும் என்பதை உணர்கின்றது பாஜக மேலிடம். 

என்னதான் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது, அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று தமிழக பாஜக மேலிடம் சொன்னாலும்,  டெல்லி பாஜக மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் விரும்புகிறதாம்.

sa

அதிமுக அலுவலக சீல் வைப்பு, அடிதடி, உண்மையான அதிமுக என்று உயர்நீதிமன்றத்திலும் , தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் என்று போய்க்கொண்டே இருந்தால் அதிமுகவின் வாக்கு வங்கி பலவீனமடைந்துவிடும் என்பதை உணர்ந்து, ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்புகிறார்களாம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்,  பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவும்.  இதனால் பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளை பாஜக மேலிடம் முன்னெடுக்கும் என்று தெரிகிறது.

tt

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.பழனிச்சாமியும் ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதுதான் அதிமுகவிற்கு வேண்டும் என வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப்போலவே மகாரஷ்டிராவிலும் ஒருங்கிணைந்த சிவசேனாவை விரும்புகிறது பாஜக மேலிடம் என்கிறார்கள்.  சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டாலும் கூட, சரத்பவாரை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த சிவசேனா வேண்டும் என்றும் நினைக்கிறதாம் பாஜக மேலிடம்.