இத்தோடு நிறுத்திக்கணும்..இல்லேன்னா..அந்த 2 பேருக்கு நேர்ந்த கதிதான் - எடப்பாடி டீமுக்கு எச்சரிக்கை

 
s

எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும் ஏற்படும்.   நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் அந்த ரெண்டு பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.   அனைவரின் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டியது வந்துவிடும் என்று எச்சரித்து இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.

k

 ஓபிஎஸ்சின் முன்னாள் ஆதரவாளரும்,  தற்போதைய இபிஎஸ் ஆதரவாளருமான கே. பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது,   ஓபிஎஸ் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கொதித்தெழுந்திருக்கிறார்.   பன்னீர் செல்வத்தை முனுசாமி தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கிறேன் . பழனிச்சாமியும் அவரது தரப்பினரும் அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிட்டு விடுவேன் என்கிறார்.

அவர் மேலும்,   கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.  அப்படி ஒன்றும் அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தவர்,    கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் பன்னீர்செல்வம் என்கிறார்கள்.  ஆனால், பழனிச்சாமிதான் தேர்தல் தோல்விக்கு காரணம்.  

e

சசிகலா கட்சியில் உறுப்பினர்.  எப்போதும் போல் கட்சியில் இருப்பார்.  மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை  என்றவர்,  இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  உண்மையில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக செயல்பட்டவர் பழனிச்சாமி தான்.   கொடநாட்டில் கொலை,  கொள்ளை நடந்திருக்கிறது.   ஜெயலலிதா வசித்த வீட்டிற்கு காவல் போடாதவர் பழனிச்சாமி . ஜெயலலிதாவின் வீட்டை தனியார் வீடு என்று சொன்னவர் தான் பழனிச்சாமி என்று ஆவேசமடைந்திருக்கும் கோவை செல்வராஜ்,   

நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் அவரது ஆதரவாளர்களும் இதற்கு மேலும் அவதூறு பேசினால் விரைவில் மற்ற அனைவரையும் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டியது வரும் என்று எச்சரித்திருக்கிறார்.

 நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கட்சி அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் செல்வார். கட்சித் தலைவரும் பொருளாளரும் அவர்தான் . அதிமுக அழிந்து விடக்கூடாது என்று நினைக்கிறார் பிரதமர்.  ஆனால் அவருக்கே துரோகம் செய்ய முயன்றவர் தான் பழனிச்சாமி.   அதிமுகவின் கொடி,சின்னம் இரண்டும் பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் என்றார் இறுதியாக.