ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்

 
kச்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்,  நாளை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் . நாளை காலை 10:30 மணிக்கு இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும் தகவல்.

ச்க்

 அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தினால் மோதல் வெடித்து ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என்று பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார் கோவை செல்வராஜ்.    ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார் .

இந்நிலையில் அந்த அணியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலக்குவதாக அறிவித்திருந்தார்.  அப்போதே அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவின.

 இந்த நிலையில் அவர் நாளை திமுகவில் இணை இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.  நாளை காலை 10:30 மணிக்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் பரவுகிறது.