கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்

 
ks

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்,  இன்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இன்று காலை 10:30 மணிக்கு இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

kk

 அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தினால் மோதல் வெடித்து ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என்று பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார் கோவை செல்வராஜ்.    ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார் .

அந்த அணியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.  அப்போதே அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவின.

 இந்த நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.