சிரஞ்சீவியின் திடீர் ஆடியோ - குழப்பத்தில் ரசிகர்கள்

 
ch

நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட திடீர் ஆடியோவால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

 தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி.  இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் பிரஜா ராஜ்யம் என்கிற தனி கட்சியை தொடங்கினார்.  அடுத்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 20 சதவீத வாக்குகளை பெற்று 18 தொகுதிகளையும் இவரது கட்சி கைப்பற்றியது.  இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த தேர்தலுக்கு பின்னர் சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.  அதனால் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனார். பின்னர் 2014 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டார்.  அதன் பின்னர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.   சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் அரசியலில் குதித்தார்.

ch

 தற்போது சிரஞ்சீவி நடித்த காட்பாதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.  இந்த நிலையில் அவர் திடீரென்று ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில்,  அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன்.  ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

 சிரஞ்சீவி இப்படி சொல்லி இருப்பதால் , அவர் வேறு ஏதேனும் கட்சியில் இணைய போகிறாரா? அல்லது ஏதாவது ஒரு கட்சிக்கு பிரச்சாரம் செய்ய போகிறாரா? என்று அவரது ரசிகர்களுடைய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.  மேலும்,   அரசியல் அரசியலை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருக்கும் படம் காட்பாதர் என்பதால் அந்த படத்தின் பிரமோசனுக்காக கூட இப்படி பேசி இருப்பாரா என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.