உங்களுக்கு ஏதாவது சித்தாந்தம் இருக்கிறதா இல்லையா?.. நிதிஷ் குமாரை தாக்கிய சிராக் பஸ்வான்

 
நாங்க 10 லட்சம் மாஸ்க் கேட்டோம்…. ஆனால் 10 ஆயிரம்தான் தந்தாங்க…. பிரதமரிடம் புகார்களை அடுக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்….

பீகாரில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்த நிதிஷ் குமாரை, உங்களுக்கு ஏதாவது சித்தாந்தம் இருக்கிறதா இல்லையா? என்று சிராக் பஸ்வான் விமர்சனம் செய்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும் சமீபகாலமாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே புகைச்சல் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் நிதிஷ் குமாரின் முடிவுக்கு அனைவரும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து, நிதிஷ் குமார் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் வழங்கினார்.

ராம் விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை…. அவசியம் என்றால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை.. சிராக் பஸ்வான் தகவல்

தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உள்ளார். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமாரை சிராக் பஸ்வான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜன்சக்தி கட்சியின் முன்னாள் தலைவர் சிராக பஸ்வான் செய்தியாளர்களிடம்  பேசுகையில் கூறியதாவது: பீகார் முதல்வராக நிதிஷ் குமார் கோரிய அனைத்தையும் பா.ஜ.க. செய்தது மற்றும் அதன் சொந்த கொள்கைகளில் சமரசம் செய்தது. மக்களை ஆணையை மீண்டும் ஒருமுறை நிதிஷ் குமார் அவமதித்துள்ளார். 

பா.ஜ.க.

நிதிஷ் குமார் நம்பகத்தன்மையை இழந்து விட்டார். ஒரு சமயம் யாரிமாவது செல்கிறீர்கள், இன்னொரு முறை வேறொருவருடன் செல்கிறீர்கள், இது நகைக்சுவையா?. உங்களுக்கு ஏதாவது சித்தாந்தம் இருக்கிறதா இல்லையா? அடுத்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்தை கூட பெறாது. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய ஆணையக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.