பா.ஜ.க.வை அவமானப்படுத்த என் பெயரை பயன்படுத்தாதீங்க.. நிதிஷ் குமாரை எச்சரித்த சிராக் பஸ்வான்

 
சிராக் பஸ்வான்

பா.ஜ.க.வை அவமானப்படுத்த என் பெயரை பயன்படுத்தாதீங்க என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நிதிஷ் குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஆளும் கூட்டணி கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனை உறுதி செய்வது போல் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

நிதிஷ் குமார்

கடந்த 3 வாரங்களுக்குள் நான்காவது முறையாக பிரதமர் மோடியுடான சந்திப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தவிர்த்துள்ளார். இதனால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வை அவமானப்படுத்த என் பெயரை பயன்படுத்தாதீங்க என்று நிதிஷ் குமாருக்கு லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க.

இது தொடர்பாக லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வான் கூறியதாவது: நிதிஷ் குமார் தனது தனிப்பட்ட நலனை தவிர வேறு எதையும் நினைத்ததில்லை.  அவர் தனது நோக்கத்திற்காக ஜங்கிள் ராஜை மறந்து விட்டார். வரலாறு தன்னை எப்படி நடத்தும் என்பதை நிதிஷ் குமார் சந்திக்க வேண்டும். அவர் பல்டு ராம் என்பதை நினைவுகூற  விரும்புகிறாரா. பா.ஜ.க.வை அவமானப்படுத்த எனது பெயரை நிதிஷ் குமார் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.