செருப்பு தூக்கும் முதல்வர்... எச்.ராஜா கடும் தாக்கு

 
h

செருப்பு  தூக்கும் முதல்வர் இல்லாததே முன்னேற்றம்தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக சாடினார்.

காரைக்கால் அருகே அம்பாள் சத்திரத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் சாதனை மற்றும் கனவு திட்டங்கள் கருத்தரங்க கூட்டம் நடந்தது.  பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்தது கிடையாது.   எந்த அதிகாரத்தை மத்திய அரசு பறித்து இருக்கிறது என்று பினராயி விஜயனும்,   மு. க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும்.  ஏதோ மத்திய அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக துதி பாடக்கூடாது என்றார்.

h

 அவர் மேலும்,   தங்களுடைய தோல்விகளை மறைக்க மத்திய அரசின் மீது குறை கூறி வருகின்றார்கள் என்றார்.

புதுச்சேரி மாநில அரசியல் குறித்த பேச்சு வந்த போது,   புதுச்சேரியில் பாஜக ஆட்சி நேரடியாக இல்லாததால் மத்திய அரசு புறக்கணிப்பு என்று சொல்வது அபாண்டமான ஒன்றாகும் .  தமிழ்நாடு,   புதுச்சேரியில் பாஜக வளர்ச்சியை கண்ணால் பார்க்க முடிகிறது .   எல்லா கட்சிகளில் இருந்தும் தொண்டர்கள் பாஜகவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .    புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியின் செருப்பை தூக்கிக்கொண்டு வந்தாரே... அது போல முதலமைச்சர் இப்போது இல்லாததே புதுச்சேரிக்கு முன்னேற்றம் தான் என்றார்.

b

எச். ராஜா இதைச் சொன்னதும் அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்க,  அதற்கு காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் பதிலளிக்க  முன் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.   இதனால் சலசலப்பு எழுந்து  செய்தியாளர்கள்  கூட்டம் பாதியில்  ரத்தானது.