முதல்வரின் என்.ஐ.ஏ. அறிவிப்பின் பின்னணி இதுவா? சந்தேகம் எழுப்பும் எச்.ராஜா

 
h

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.   முதல்வரின் இந்த உத்தரவு குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா.

st

 தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,   கோவை சம்பவத்தில் தனது வாக்கு வங்கிக்காகத்தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டாரா தமிழக முதல்வர் என்ற சந்தேகம் எழுகிறது  என்றார் எச்.ராஜா.

 அவர் மேலும்,  ஏனென்றால் என்.ஐ.ஏவுக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை .  தனது ஓட்டு வங்கிக்காக நாளைக்கு அவர்களுடைய ஆட்களை கைது செய்தால் அதை மத்திய அரசுதான் செய்தது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான் இப்படி அறிவித்தாரோ என்னவோ? என்றார்.

தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்து பேசிய எச். ராஜா,  ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு.   தமிழ்நாடு ஆளுநரை அவதூறாக பேசுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.