ரா.பா.வுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த வாய்ப்பு

 
rb

ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்த கோரிக்கைகள் மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் பரிசீலனை செய்து வழக்கின் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

 ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக அரசின் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக சொல்லி மூன்று கோடி ரூபாய் வழங்கீடு செய்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இந்த வழக்கில் அவர்  தலைமறைவாக இருந்து பின்னர் கைதானார் அவர் அதற்கு முன்னதாகவே  முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அந்த மனு தள்ளுபடி ஆனதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

sh

 அதன்படி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.  விசாரணை நடைபெறும் காவல் நிலையத்திற்கு காவல் எல்லைக்கு வெளியில் எங்கேயும் செல்லக்கூடாது காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டில் ஒப்படைத்து விட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.  கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று இந்த நிபந்தனைகளை விதித்தது உச்சநீதிமன்றம்.

 இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அந்த நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தலைமை நீதிபதி என்வி ரமணா முன்பு ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்ததற்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா,  ராஜேந்திர பாலாஜி தனது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த அதை பரிசீலனை செய்து வழக்கின் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.