போட்றா வெடிய .. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

 
op

அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், பொதுக்குழுவுக்கு முந்தையை நிலையே தொடரவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து தர்மம் வென்றது என்று தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘போட்றா வெடிய..’என்று சொல்லி கொண்டாடி வருகின்றனர்.

op

கடந்த மாதம் ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது.   அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாக ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதே கோரிக்கையுடன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைத்து வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

v

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் .  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.   ஆனால் இந்த வழக்கை  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்தது .  இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ,  இந்த வழக்கில் இருந்து விலகினார். 


 இதை அடுத்து ஜி. ஜெயச்சந்திரன் இந்த வழக்கு விசாரணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.   இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.   இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.   அந்த தீர்ப்பில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அதிமுகவின் முந்தைய நிலை தொடர வேண்டும்.   ஜூன் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லாது என்று சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று  ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து, ஆடிப்பாடி தர்மம் வென்றது.. போட்றா வெடிய,, என்று சொல்லி கொண்டாடி வருகின்றனர்.