எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது - லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு

 
ச்

 முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.  

 கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் எஸ். பி. வேலுமணி. காண்ட்ராக்டர் ஆக இருந்த எஸ். பி. வேலுமணி,  சட்டமன்ற உறுப்பினரானதும் காண்ட்ராக்டர் என்கிற தொழிலில் இருந்து வெளியேறினார்.  

 கடந்த ஆட்சி காலத்தில்  அமைச்சராக இருந்தபோது,  சென்னை- கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு தான் வேலை செய்த நிறுவனத்திற்கே டெண்டரை ஒதுக்கினார்.  அதனால் பல கோடி ரூபாய் அளவில் அரசுக்கு முறைகேடு நடந்தது என்று முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  கோவை லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ச்ப்

 இந்த வழக்கை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது.  60 இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 இதை அடுத்து தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை பதற்போது பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

 எஸ்.பி. வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  இரண்டு ஊழல் வழக்குகளை ரத்து செய்ய போரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.    வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.  அதன் அடிப்படையிலேயே தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

 இந்த நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய வேலுமணி தொடர்ந்த வழக்குகள் நாளை  மீண்டும் விசாரணைக்கு வருகிறது.