மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீது வழக்கு..அனுமதி கோரும் சிபிஐ

 
ட்

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா  மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருக்கிறது.  முன்னாள் அமைச்சர்கள் , ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

 குட்கா மற்றும் பான் மசாலா போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு தடை விதித்திருந்தது.  இந்த தடையை மீறி தமிழகத்தில் சட்டவிரோதமாக அவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.   இந்த பின்னணியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  காவல்துறை உயர் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது .

வி

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.   இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,   சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.   அதன் பின்னர் லஞ்சம் வாங்கி நிதி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ,ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன்,  சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

 இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா , ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் டி.  ராஜேந்திரன் ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி இருக்கிறது.  தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் சிபிஐ இந்த வழக்கில் விசாரணையை துவங்கும் என்று தெரிகிறது .