பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்.. பஞ்சாப் லோக் காங்கிரஸை பா.ஜ.க.வுடன் இணைக்கும் கேப்டன் அமரீந்தர் சிங்.

 
கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு அப்போது பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அப்போது முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. ஒரு கட்டத்தில் கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்  கட்சி படுதோல்வியை சந்தித்தது.

நவ்ஜோத் சிங் சித்து

இந்த சூழ்நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது கேப்டன் அமரீந்தர் சிங் லண்டன் மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை முடிந்து வரும் வாரம் கேப்டன் அமரீந்தர் சிங் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பஞ்சாப் லோக் காங்கிரஸை, பா.ஜ.க.வுடன் இணைப்பதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. 

பா.ஜ.க.

கேப்டன் அமரீந்தர் சிங் இந்தியா திரும்பியவுடன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் பா.ஜ.க.வுடன் இணைக்கப்படும் என தகவல். கடந்த ஆண்டு கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸிருந்து விலகிய உடன் அவரது ஆதரவாளர்கள பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். அண்மையில், பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் உள்ளிட்ட தலைவர்கள் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.