மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்? கனிமொழி எம்பி கேள்வி

 
க்

விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகிறார்கள் என்ற மக்களவையில் நடந்த விவாதத்திற்கு,  வெங்காயம் -தக்காளி விலை குறைந்து  இருப்பதாக மத்திய அமைச்சர் சொல்கிறார்.  அதை வைத்து மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்? என்ற கேள்வி எழுப்பினார் கனிமொழி எம்பி

டொ

நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பான வாதம் நடந்தது.  அப்போது பேசிய கனிமொழி எம்பி,    பாஜக ஆளாத மாநிலங்களில் கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது  பற்றி குறிப்பிட்டு பேசினார் பாஜக ரிஷிகாந்த் துபே.   எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்... 2016ஆம் ஆண்டில் பணம் மதிப்பிழப்பு கொண்டு வந்த பின்னர் கறுப்பு பணம் என்பதே இல்லாமல் ஆகிவிடும் என்று சொன்னார்கள்.  ஆனால் அதன் பிறகும் எப்படி இந்த நாட்டிலே கருப்பு பணம் உலவுகிறது என்பதை அவர் எனக்கு சொன்னால் வசதியாக இருக்கும் என்றார்.

  பண மதிப்பிற்கு பின்னர் இந்தியா மிகப்பெரிய அளவில்  பொருளாதாரத்தில் சரிந்து இருக்கிறது .  எத்தனையோ பேர் பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வரிசையில் நின்று உயிரிழந்திருக்கிறார்கள்.  பண மதிப்பிழப்பு விவகாரத்தால் நாடு எத்தனையோ இன்னல்களை சந்தித்தது . இதற்கெல்லாம் காரணம் அதை பொறுமையாக இந்த நாடு ஏற்றுக் கொண்டது.  இவர்கள் சொன்ன வாக்கு என்ன? கறுப்பு பணம் இருக்காது என்று தானே? ஆனால் இப்போதும் கருப்பு பணம் கிடைக்கிறது. இதற்காக  இத்தனை இன்னல்களையும் பொருளாதாரச் சரிவையும் ஏன் சந்தித்தது? என்கிற விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேட்ட கனிமொழி ,

க்ன்

பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டிருக்கிறது.  விலைவாசி உயர்வினால் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறி இருக்கிறது.  பிரதமருக்கு ஒரு சிறுமி எழுதிய கடிதத்தில் மேகி விலையும்,  பென்சில் விலையும் அதிகரித்து விட்டதாக கவலை தெரிவித்திருக்கிறார்.  அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

ச்

சாமானிய மக்களின் உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.  தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்து உள்ளதாக மத்திய அமைச்சர் சொல்கிறார்.  அதற்காக 
அதை மட்டும் வைத்து மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.   அவர்  மேலும், இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் வாழ்வதற்காக அரசு உதவி செய்து வருகிறது.  ஆனால் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்குகிறது அரசு.  இப்படிப்பட்ட அரசு தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டினார்.