இரண்டு நாக்குகள் இலவசம்னு அறிவிக்கலாமே - பிரதமர் மோடி மீது கடும் தாக்கு

 
m

மத்திய பிரதேசத்தில் ஒரு பேச்சு; குஜராத்தில் ஒரு பேச்சா?  இரண்டு சிலிண்டர்கள் இலவசம் என்பதற்கு பதிலாக இரண்டு நாக்குகள் இலவசம் என்று அறிவிக்கலாமே என்று கடுமையாக விமர்சித்துள்ளது முரசொலி தலையங்கம்.

குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது.   இந்த முறை ஆட்சிக்கு வருவது சிரமமோ என்று கட்சியின் தலைமை நினைக்கிறது. அதனால் தேர்தல் தேதியை இன்னமும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.   இமாசலப் பிரதேசத்திற்கு தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு குஜராத்தை மூடி வைத்திருக்கிறார்கள்.  குஜராத் முடிவுகள் பணால் ஆனால் அது இந்திய தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் தான் இந்த பயமும் பதற்றமும் என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி.

 மேலும், ப்  குஜராத் மாநில மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குஜராத் மாநில அமைச்சர் ஜித்துவாகன் வாக்குறுதி அளித்திருக்கிறார்.  இதன் மூலம் அம்மாநிலத்தின் 38 லட்சம் இல்ல இல்லத்தரசிகல் பயனடைவார்கள் அவர்களுக்கு 1,700 ரூபாய் மிச்சமாகும் என்றும் சொல்லி இருக்கிறார் .

ஜே

இலவசங்களுக்கு எதிராக பிரதமரும் பாஜகவும் பேசி வருகிறது.  தேர்தல் ஆணையத்தை பேசவும் வைக்கிறது.  ஆனால் இன்னொரு பக்கத்தில் தாங்கள் வெற்றி பெறுவதற்காக இலவசத்தை அறிவிக்கிறது.  இவர்களைத்தான்,  ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.  

 குஜராத் அமைச்சர் அறிவித்த அதே நாளில் மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை காணொளி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.   அப்போது,  இலவசங்களுக்கு எதிராக கொந்தளித்து பேசினார்.    வரி செலுத்துவோர் பலரும் எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். தங்கள் வரி பணம் தேர்தல் இலவசங்களின் உபயோகத்திற்காக செலவிடப்படும் போது வேதனை அடைகிறார்கள்.   இலவசங்கள் கலாச்சாரத்தில் இருந்து நாட்டை விடுவிக்க தமிழகத்தின் பெரும் தரப்பினர் தீர்க்கத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார் .  

இரண்டு சிலிண்டர்கள் கொடுத்தால் குஜராத்தில் உள்ள வரிசெலுத்துவோர் வறுத்தப்பட மாட்டார்களா? வருத்தப்பட்டு பாஜகவுக்கு எதிராக வாக்களித்தால் என்ன ஆகும் ? இந்த பசப்பு வார்த்தைகள் இலவசங்கள் என்றால் நாங்கள் மட்டுமே அறிவிக்க வேண்டும் மற்ற கட்சிகள் அறிவிக்க கூடாது என்று நினைக்கிறதா பாஜக? மத்திய பிரதேசத்தில் ஒரு பேச்சு; குஜராத்தில் ஒரு பேச்சா?  இரண்டு சிலிண்டர்கள் இலவசம் என்பதற்கு பதிலாக இரண்டு நாக்குகள் இலவம்ச என்று அறிவிக்கலாமே  என்ற கேள்விகளை முன் வைத்து இருக்கிறது முரசொலி.

எது இலவசம் என்பதை பாஜக தலைமையோ இந்திய அரசோ வரையறுத்து விட்டதா?  இலவசம் எது மக்கள் நலத்திட்டம் எது என்பது குறித்து உயர் நீதிமன்றமே விளக்கம் அளித்திருக்கிறது.  இலவசங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறது.