’’டிஜிபி, சாலமன் பாப்பையாவை மட்டும் தூக்கி சுமக்கலாமா?ஆளுநரை அழைத்ததால் ஆதினத்தை அச்சுறுத்துகிறதா அரசு?’’

 
ட்க்

 டிஜிபி,  சாலமன் பாப்பையா  தூக்கிச் சுமக்கலாம் .  ஆதினத்தை பக்தர்கள் தூக்கி சுமக்க கூடாதா?  ஆளுநரை அழைத்ததால் ஆதினத்தை அச்சுறுத்துகிறதா அரசு? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம. ரவிக்குமார்.

 மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்வார்கள்.  பக்தர்களை தேடிச் சென்று அருள் ஆசி வழங்குவார் ஆதினம்.  பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால், மனிதர்களை மனிதர்களே சுமக்கலாமா என்று திராவிடர் கழகம்  எதிர்ப்பு தெரிவித்ததால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருக்கிறார். 

ர

 தமிழக அரசின் இந்த தடைக்கு எதிராக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.  ரவிக்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  ’’பட்டின பிரவேசம் என்பது பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் தாங்களாக மனமுவந்து ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் சுமந்துவரும் ஒரு பக்தி திருவிழா.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவில்லை.  ஆனால் திமுக அரசு பதவி ஏற்ற பின்னர் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கிறது’’என்று சொல்லும் ரவிக்குமார்,   ’’தமிழ்நாட்டில் உள்ள ஆதினகர்த்தர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி தலைமையகத்திற்கு வரவழைத்து அவர்கள் மூலமாக ஆன்மீக அரசு என்று சொல்ல வைத்த ஆட்சியாளர்கள்,  அப்படி பாராட்டுப் பத்திரம் கொடுத்த தருமபுரம் ஆதினத்திற்கு செய்யும் மரியாதை இதுதானா?’’ன்று கேட்கிறார் .

அவர் மேலும்,   ‘’தர்மபுரம் ஆதினம் ஆன்மிக யாத்திரையின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநரை அழைத்து விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தான் இந்த பாரம்பரிய இறைநம்பிக்கை விழாவை நடத்த விடாமல் அச்சுறுத்தி மிரட்டி பார்க்கிறதா அரசு ?’’என்று கேட்கிறார்.

ச்ச்ட்

’’தமிழக டிஜிபி பணி ஓய்வு பெற்ற பிறகு அவரை காரில் உட்கார வைத்து கயிறு கட்டி காவலர்கள் இழுத்துச் செல்வது பாரம்பரிய சம்பிரதாய மரபு என்று சொல்லக்கூடிய அரசு,  பக்தர்கள் தங்க குருமார்களை பட்டினப்பிரவேசம் பத்தி திருவிழாவில் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று கேட்கிறார்.

 ’’தேர்தல்களில் , போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தோளில் தூக்கி சுமந்து கொண்டாடுவது மரபு தானே?’’ என்று கேட்கும் ரவிக்குமார்,  ‘’ பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பாராட்டு தெரிவித்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து தூக்கி சுமந்ததை அரசு மறந்து விட்டதா? இல்லை அதற்கு தடைவிதித்தா?’’ என்று கேட்டுகும் ரவிக்குமார்,   ‘’ மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது அடிமைத்தனம் என்று சொல்லக்கூடிய இவர்கள் பெற்றோர்களை சுமப்பது கூட சட்டவிரோதம் என்று கேட்டு மனு கொடுப்பார்கள்’’ என்ற ஆவேச பட்டிருக்கிறார்.

’’ தர்மபுரம் ஆதீனம் பிரதேசத்திற்கு தடை விதிக்க முடியாது.  சட்டம் கொடுத்த விதிகளுக்கு முரணாக செயல்படும் தமிழக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இதற்காக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுக்க இது தமிழர் கட்சி தலைமையிலான குழு செயல்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.