உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆக முடியாது - மனோஜ் பாண்டியன்

 
m

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாக ஓபிஎஸ் தனது மனுவில்  கூறி இருந்தார்.  இது தொடர்பாக எடப்பாடி தரப்பிலும் அதிமுக தலைமை அலுவலகம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  

ii

விசாரணைக்கு பின்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் தடை விதிக்க கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.  பொதுக்குழுவுக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது என்கிறார் எடப்பாடி ஆதரவாளரும் அவரது வழக்கறிஞருமான இன்பதுரை.

i

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆக முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும்,  வழக்கறிஞரும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மீண்டும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி  பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆக முடியாது என்கிறார் மனோஜ் பாண்டியன்.   அவர் மேலும்,  அதிமுகவில் இனி யாரையும் நியமிக்கவும், நீக்கவும் முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது . மற்றபடி  சமாதானம் செய்துகொள்வது பற்றி பன்னீர்செல்வம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.