எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கைதாகலாம்?
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாக தொடங்கி இருப்பதால் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது நண்பர் இளங்கோவனும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பந்த சம்பவத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணை நடந்து வந்தது. இந்த மறு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன .
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூளையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்த கொலை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்த பல மரணங்கள் நிகழ்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எப்படியும் சிக்கி விடுவார் என்று மறுவிசாரணை தீவிரமாக சென்றது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் குடும்பத்தினர் உள்பட 316 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது இந்த மறு விசாரணையில். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது நண்பரும் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவனையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட நினைத்திருந்த போது, மறுவிசாரணையில் வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய மறுத்து விட்டார்கள். அதனால் தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்போது சிபிசிஐடி விசாரணை தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. அனேகமாக தீபாவளிக்கு பின்னர் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமியும் இளங்கோவனும் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் பரவுகிறது.