சசிகலாவுக்கு எதிராக சி.வி.சண்முகம் போட்ட திட்டம்! போலீசுக்கு போன அதிமுக நிர்வாகி!

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்களில் ஒருவர் சி.வி. சண்முகம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறியதற்கு பின்னால் சசிகலாவை எதிர்ப்பவர்களில் தீவிரமாக இயங்கி வருபவர் ஆக உள்ளார் சி.வி.சண்முகம்.
இந்தநிலையில் சசிகலாவின் வருகைக்கு சி.வி.சண்முகம் முட்டுக்கட்டை போடுவதாகவும் அதனால் பாதுகாப்பு வேண்டும் என்று அதிமுக நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், திண்டிவனம் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமாணவர் முகமது சதக். இவர் திண்டிவனம் நகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.
அந்த மனுவில், திண்டிவனத்தில் வரும் 5-ஆம் தேதியன்று எனது மகள் திருமண நிகழ்ச்சிக்கு சசிகலா வருகை தர இருக்கிறார். இதனை விரும்பாத முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு சசிகலா வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளார். சசிகலா குறித்து போலீசில் போலியான புகார் ஒன்றையும் சண்முகம் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனது மகளின் திருமண விழாவிற்கு சசிகலா வருவதை அனுமதிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் இந்த விவகாரத்தால் விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு எழுந்திருக்கிறது.