ரெய்டு நடக்கும்போது மாஜி வீட்டுக்குள் போக சி.வி. சண்முகம் வாக்குவாதம்

 
cv

 கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி .விஜயபாஸ்கர்.  அவர் அமைச்சராக இருந்தபோது திருவள்ளூரில் இருக்கும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக தகுதி சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்திருக்கிறது.  இது குறித்து ஆவணங்களை கைப்பற்ற சென்னை, மதுரை, சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை நடத்தி வந்த வந்தனர்.

vi

 சென்னை அடையாறில் உள்ள சி. விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர்.   அப்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்பியும் ஆன சிவி சண்முகம்,  விஜயபாஸ்கர் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.   அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.   லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கும் போது அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வரக்கூடாது என்று போலீசார் தடுத்தார்கள்.  ஆனால் அவர்களுடன் சிவி சண்முகம் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.

ve

 சிறிது நேரம் கழித்து விஜயபாஸ்கர் வீட்டிற்குள் செல்வதற்கு சிவி சண்முகத்திற்கு அனுமதி கிடைத்தது.   வீட்டிற்குள் சென்று விட்டு வெளியே வந்த  சண்முகம் செய்தியாளர்களிடம் பேசிய போது,   அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெறுகிறது .  ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி அந்த சோதனைகளில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.   அப்படி இருக்கும்போது மீண்டும் ஒரு வழக்கினை போட்டு சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறது என்று ஆவேசப்பட்டார்.