அங்கிருந்தபடியே சி.வி. சண்முகம் போட்ட போன்! அதில் திருப்தியான ஜெயக்குமார்

 
j

 நீண்ட இழுபறிக்குப் பின்னர்தான் அதிமுகவில் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள்.  அதிமுகவில் ஏற்பட்ட இந்த இழுபறிக்கு காரணம் சொல்கிறர்கள்.  இரட்டை தலைமை ஒரு காரணம் என்றால்,  அடுத்தது மூத்த நிர்வாகிகளின் போட்டி முக்கிய காரணமாம். 

ஆரம்பத்திலிருந்தே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் என்று பிடிவாதமாக நிற்க, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்.  அப்புறம் போகப் போக இரண்டு சீட்டும் தனது ஆதரவாளருக்கு  என்று எடப்பாடி காய் நகர்த்தவும் கடுப்பாகி இருக்கிறார் ஓபிஎஸ்.

ச்வ்

இரட்டைத்தலைமையின் இந்த போட்டியில் கடைசியில் ஆளுக்கு ஒரு ஆதரவாளர் என்று மீண்டும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் ஆரம்பத்திலிருந்தே தனது தீவிர விசுவாசிகளான தர்மர், சையது கான்   இருவரில் ஒருவருக்கு  சீட்கேட்டிருக்கிறார்.  ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதுவும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்ததால் ரொம்ப திணறிப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 கடைசியாக தனது தீவிர ஆதரவாளர்களான ஜெயக்குமார்,  சி.வி. சண்முகம் இரண்டு பேரும் போட்டி போட்டதும்  யாருக்கு கொடுப்பது என்று பெரும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார் எடப்பாடி. அதே நேரம் ஓபிஎஸ் பக்கம் சையது கானா,   தர்மரா என்று வந்தபோது சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சையது கான். அவரை எம்.பி. ஆக்கினால் மேலும் கட்சிக்குள் பல சிக்கல்கள் ஏற்படும் என்று எடப்பாடியும் அவரது தரப்பில் சொல்ல , அப்படி என்றால் தர்மருக்கு அந்த சீட் என்று சொல்ல ஓபிஎஸ் ரூட் கிளியர் ஆகியிருக்கிறது.

ச்வ்ச்

 ஆனால் எடப்பாடிக்கு மற்றும் தலைவலி போகவே இல்லை.   ஜெயக்குமார் - சண்முகம் என்று பெரும் போராட்டமாக இருந்திருக்கிறது.  கடைசியில் எடப்பாடி,  நீங்கள் இருவருமே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ஜெயக்குமார் சண்முகத்திடம் சொல்லியிருக்கிறார்.  சண்முகம் ஜெயக்குமாரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.   நான் இந்த சீட்டை விட்டு கொடுக்க வேண்டும் என்றால் கட்சியில் எனக்கு ஏதாவது முக்கிய பதவி வேண்டும் என்று  ஜெயக்குமார் சொல்ல , அதை அங்கிருந்தபடியே  சண்முகம் எடப்பாடி இடம் சொல்ல,  கட்சியின் அவைத் தலைவர் பதவியில் தற்காலிகமாகத் தான் தமிழ்மகன் உள்ளார்.  அந்த பதவிக்கு ஜெயக்குமாரை நியமித்துவிடலாம் என்ற எடப்பாடி சொல்ல,  அதில் திருப்தியான ஜெயக்குமார் அந்த ஒரு சீட்டை சி.வி.சண்முகத்திற்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்ற தகவல்.