கேரளாவில் உயர் கல்வியை அழிக்க பா.ஜ.க. கவர்னரை பயன்படுத்துகிறது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கேளாவில் உயர் கல்வியை அழிக்க கவர்னரை பா.ஜ.க. கவர்னரை  பயன்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  குற்றச்சாட்டியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில்  பேசுகையில்,  சில மாநிலங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்குவதும், தகுதியற்ற பொருட்கள் மற்றும் செலவினங்களுக்காக செலவு செய்வதும் கவலைக்குரிய விஷயம் என தெரிவித்து இருந்தார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எம்.வி. கோவிந்தன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது  கூறியதாவது: குறைந்தபட்ச உத்தரவாத வேலைவாய்ப்பு போன்ற நலத்திட்டங்களை அமல்படுத்தாமல் தடுக்கும் மத்திய அரசின் நோக்கம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் இருந்து தெரிய வந்தது. 

சென்னையில் நகரத்தார்களின் சர்வதேச மாநாடு | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை இடது ஜனநாயக முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்க முடியாது. கேரளாவில் உயர் கல்வியை மேம்படுத்தி உலக தரத்திற்கு உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும்  வேளையில், மாநிலத்தில் உயர்கல்வியை அழிக்க கவர்னரை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. துணைவேந்தர் பதவியை கவர்னருக்கு அரசு வழங்கியது. இப்போது அவர் அந்த பதவில் நீடிக்க வேண்டுமா என்று விவாதிக்க வே்ணடிய நிலைக்கு விஷயங்கள் வந்துள்ளன. எந்த எல்லைக்கும் செல்வேன் என்ற நிலைப்பாட்டை கவர்னர் எடுத்துள்ளதால், சட்டம் மற்றும் அரசியல் சாசனப்படி, எந்த எல்லைக்கும் சென்று அவரை எதிர்ப்பது என கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. 

ஆரிப் முகமது கான்

கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்க நாங்கள் தேவையானதை செய்வோம், எந்த எல்லைக்கும் செல்வோம் ஆனால் சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி.  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா உள்பட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம், சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாத ஒன்றை கவர்னர் ஆரிப் முகமது கான் செய்கிறார். அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டத்தின்படி, இதை எப்படி கையாள்வது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது. கவர்னர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்று பல்வேறு நீதிமன்றங்கள் கூறியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.