திருமாவளவனை முதல்வர் கண்டிக்க வேண்டும் - வெடிக்கும் பாஜக

 
t

தொல்.திருமாவளவன் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொல். திருமாவளவனை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது பாஜக.

நவம்பர் 6ம் தேதி அன்று ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களைஅ ச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் விநியோகம் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

st

அவர் மேலும்,  சூத்திரர்கள் மற்றும் பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை மட்டும் தொகுத்து இருக்கிறோம். நான் எழுதியிருக்கிற முன்னுரையுடன் 32 பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதிகள் தயாராக இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்  திருமாவளவன்.

இதனால் கொதித்தெழுந்த தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’அப்பட்டமான மோசடி வேலை. மநுஸ்மிருதிக்கு எழுத்து வடிவமே கிடையாது.  ஹிந்துக்களை, ஹிந்து பெண்களை அவதூறு செய்து, இல்லாத சாதி பாகுபாட்டை இருப்பதாக சொல்லி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கிருஸ்துவ மதமாற்ற, அந்நிய தீய சக்திகளிடம் கையேந்தி விலை போனவர்களின் வெற்று கூச்சலே இது’’என்கிறார்.

அவர் மேலும்,  மத நம்பிக்கைகளை, உணர்வுகளை புண்படுத்தும் தொல்.திருமாவளவன் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொல். திருமாவளவனை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.