மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது... முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அரசாங்கம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஊடக விசாரணை

ஒருவர் ஏதேனும் தவறு செய்திருந்தால், அந்த தவறுகளை திருத்திக் கொள்ள அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். யாரேனும் ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால், சட்டம் தனது கடமையை செய்யும். ஆனால் ஊடக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.