பாலம் : அதிமுக - திமுக போஸ்டர் யுத்தம்

 
dmk

அதிமுக கட்சிக்குள்ளேயே உட்கட்சி பூசலால் போஸ்டர் யுத்தம் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில்,  திமுகவினரும் அதிமுகவினரும் ஒரு பக்கம் போஸ்டர் யுத்தம்  நடத்துகின்றனர்.   கோவையில் மேம்பாலங்கள் கட்டியது தொடர்பான இந்த போஸ்டர் யுத்தத்தை கண்டு பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

 கோவை - திருச்சி சாலையில் ரெயின்போ முதல் அல்வேர்னியா வரைக்கும்,  கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் இருந்து ராவண கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபம் வரைக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.   இந்த பாலங்களுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு.   இந்தத் திட்டப் பணி கடந்த அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

po

கொரோனா தொற்று பரவ காரணமாக ஊரடங்கு அமல் படுத்தி இருந்ததால் கட்டுமானப் பணி முடங்கியது.   கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் வேலை துவங்கப்பட்டது.  சமீபத்தில் இந்த வேலையை பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

 திறப்பு விழாவின் போது அதிமுக-பாஜக- திமுகவினர் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில் திமுகவினரும் அதிமுகவினரும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர்.   அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ,  முன்னாள் முதல்வர் பழனிச்சாமி,  முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் இரு பாலங்களின் படங்களை அச்சிட்டு நன்றி தெரிவித்து கோவை நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 இதற்குப் போட்டியாக  திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ,  மேம்பாலங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ,  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.  

 இரண்டு கட்சியினரின் இந்த செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.   மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கவனம் செலுத்த வேண்டுமே தவிர இப்படி விளம்பரத்திற்காக போஸ்டர் ஒட்டுவதை  தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வலியுறுத்தி வருகிறார்கள்.