ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு வருந்தத்தக்கது -கே.எஸ்.அழகிரி பரபரப்பு

 
ட்ட்

ஓ.  பன்னீர்செல்வம் பாஜக ஆதரவாளர் என்பதை அவரே வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார்.   ஆகவே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அடுத்த பொதுக்குழுவில் அது உறுதியாக இருக்கும் நிலையில்  பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பாஜக முயலும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக காங்கிரசுடன் பேச்சு நடத்துகிறார் என்ற தகவல் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது .

பா

ராகுல் காந்தியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது பாஜகவிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி எச்சரித்ததாகவும் தகவல் பரவுகிறது .  இப்போதைக்கு பாஜகவை உதறித்தள்ள வேண்டும் என்றால் காங்கிரஸுடன் நட்பு பாராட்டுவது தான் ஒரே முடிவு என்ற நிலைக்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள்.

  அதேநேரம் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் போட்டியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எடப்பாடிபழனிசாமியிடம் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.     காங்கிரஸ் -எடப்பாடிபழனிசாமி உறவினை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

க்ச்

 செய்தியாளர்களிடம் இன்று பேசிய கே எஸ் அழகிரி,  அதிமுக விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.   ஓபிஎஸ் -இபிஎஸ் இரண்டு பேரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அதிமுகவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்து இருந்தால் அது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார்.