ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீச்சு - அதிமுக பொதுக்குழுவில் களேபரம்

 
ooop

அதிமுகவின் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் சம்மதம் தெரிவிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர தனித் தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது.  தனித் தீர்மானங்கள் குறித்து முடிவு எடுப்பதும் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் பன்னீர் செல்வத்தின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள். 

bb

 இதனால் ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்ததுமே அவருக்கு எதிராக,  துரோகி துரோகி என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.  அவர் மேடையில் ஏறியதுமே சிவி சண்முகம் , வேலுமணி உள்ளிட்ட பலரும் எழுந்து நின்று வரவேற்கவில்லை.  அது ஒரு பக்கம் இருந்தாலும் மேடைக்கு கீழிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் துரோகி பன்னீர்செல்வம் வெளியே போ...ஓபிஎஸ் வெளியே போ என்று கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

 முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்தியும் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.  

yyyt

 ஒற்றை தலைமை தீர்மானம் குறித்து பொதுக்குழுவில் எதுவும் முடிவு எடுக்க கூடாது என்ற நிலையில் நீதிமன்ற உத்தரவிட்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன், செல்லூர் ராஜூ , சிவி சண்முகம் உள்பட பலர் ஒற்றை தலைமை தீர்மானம் குறித்து பேசியதோடு அல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லி வந்தனர்.

kuuuu

 இந்த களேபரங்களுக்கு இடையில் ஓ. பன்னீர்செல்வம் பேச எழுந்த போது,  அவரைப் பேசவிடாமல் கூச்சல் போட்டு அவர் மீது தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்தனர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்.   இதனால் ஆவேசமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்,  சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இந்த பொதுக்குழுவை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று சத்தம் போட்டார்.  அதன்பின்னர்  ஓ. பன்னீர்செல்வம் மேடையை விட்டு வெளியேறிச் சென்றார்.  இதனால் பொதுக்குழு பாதியிலேயே நின்றது.