சச்சின் பைலட், அசோக் கெலாட் மோதல் காங்கிரஸின் உள்விவகாரம்.. பா.ஜ.க. எம்.பி. மேக்வால்

 
கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

சச்சின் பைலட், அசோக் கெலாட் மோதல் காங்கிரஸின் உள்விவகாரம் என்று பா.ஜ.க. எம்.பி. ஏ.ஆர். மேக்வால் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசினார். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து அசோக் கெலாட் வெளியேறி விடுவார் என்பது போல் சச்சின் பைலட் பேசினார். ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நேற்று முதல்வரை பாராட்டியது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி இதே போல் நாடாளுமன்றத்தில் பாராட்டினார், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம் என தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத்

சச்சின் பைலட்டின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சச்சின் பைலட் கருத்து குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,  இது போன்ற கருத்துக்களை கூறக்கூடாது. கட்சியில் உள்ள அனைவரையும் இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கே.சி.வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

ஏ.ஆர்.மேக்வால்

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஏ.ஆர்.மேக்வால் கூறுகையில், ராஜஸ்தான் காங்கிரஸ் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் என இரு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதால், மாநிலத்தில் ஆட்சி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்தின் கடைசி நாளில் அவரை பிரதமர் மோடி பாராட்டி  பேசினார். சச்சின் பைலட் நாற்காலியை (முதல்வர் பதவி) கவலையடைந்துள்ளார். அது அவர்களின் உள்விவகாரம் என தெரிவித்தார்.