பீகாரில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி வீழ்ச்சி.. நாடு செய்ய வேண்டியதை பீகார் செய்தது.. தேஜஸ்வி யாதவ்

 
தேஜஸ்வி யாதவ்

பீகாரில் பா.ஜ.க.வை ஆட்சியில் வெளியேற்றியதை குறிப்பிட்டு, நாடு செய்ய வேண்டியதை பீகார் செய்தது என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜே.டி.யு) தலைவரும்,  முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பீகாரில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார்.  நேற்று முன்தினம் பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நிதிஷ் குமார்
பீகாரில் பா.ஜ.க.வை ஆட்சியில் வெளியேற்றியதை குறிப்பிட்டு, நாடு செய்ய வேண்டியதை பீகார் செய்தது என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.  இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு செய்ய வேண்டியதை பீகார் செய்தது, அவர்களுக்கு ஒரு வழி காட்டியுள்ளோம். எங்கள் போராட்டம் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரானது. ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வலியை எங்கள் முதல்வர் உணர்ந்துள்ளார். 

பா.ஜ.க.

ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மாதத்துக்குள் பம்பர் வேலைகைளை வழங்குவோம், இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும். மகாகத்பந்தன் அல்லது மெகா கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதால், பீகார் சட்டப்பேரவையில் பா.ஜ.க. மட்டுமே  எதிர்க்கட்சியாக இருக்கும். பா.ஜ.க.வால் வகுப்புவாத பதட்டங்கள் பரப்படுகிறது,  பிராந்திய கட்சிகளை அவர்கள் (பா.ஜ.க.) கொல்ல முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.