5வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை.. இன்று ஊழல் செய்பவர் எளிதில் தப்பிக்க முடியாது... பா.ஜ.க.

 
லாலு பிரசாத் யாதவ்

இன்று ஊழல் செய்பவர் எளிதில் தப்பிக்க முடியாது என டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.55 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறித்து பீகார் பா.ஜ.க. தலைவர் தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடை தீவனங்கள் வாங்கியதில்  ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக மட்டும் 5 வழக்குகள் பதிவாகின. அதில்,டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.55 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கும் அடங்கும். அண்மையில் டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.55 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75  பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி நீதிமன்றம் நேற்று லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 

சஞ்சய் ஜெய்ஸ்வால்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பீகார் மக்கள் ஒருபோதும் மோசடி செய்யும் ஒருவரை விரும்பவோ அல்லது அனுதாபப்படவோ இல்லை. பீகார் மக்கள் ஒருபோதும் மோசடியாளர்களை விரும்பியதில்லை. அதனால்தான் இவ்வளவு பிரபலமான தலைவராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோதிலும் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து மக்களவை தேர்தலில் தோல்வியடைந்து வருகின்றனர். எதிர்காலத்தில் அவரது கட்சி அழிந்து விடும். மற்றவர்கள் ஊழல் செய்ய முடியும் என்றால் நான் ஏன் செய்யக்கூடாது என்ற சித்தாந்தம் கொணட ஒருவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம். இந்த வகை மக்களுக்கு வாக்களிப்பது பீகாரை மேலும் குழிக்குள் தள்ளும்.

காங்கிரஸ்

அவரது கட்சி மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்று நினைத்தாலும் இந்த ஊழல் மிகவும் அப்பட்டமாக செய்யப்பட்டது. இதனால் அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். நான்காம் தர கால்நடை வளர்பில் இருந்து தொடங்கிய ஒருவர், டெல்லியில் நான்கு பண்ணை வீடுகளை வைத்திருக்கும் போது, அந்த நபர் அதை சட்டவிரோதமாக செய்யப்படுகிறார். இன்று ஊழல் செய்பவர் எளிதில் தப்பிக்க முடியாது. லாலு பிரசாத் யாதவ் தனது சொத்துக்களை பெருக்கிக் கொண்ட விதத்தில், அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.